மணல் கடத்தலை தடுத்த நாம்தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெ

மணல் கடத்தலை தடுத்த நாம்தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதில் காயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் சிவசங்கரன் புகார் செய்தார்.  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சி பட்டியை சேர்ந்தவர் சிவசங்கரன். (வயது39). இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வருகிறார். தற்போது நத்தம் அவுட்டர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும் பன்னியாமலையை சேர்ந்த ராஜா (45) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் இப்பகுதியில் நடந்தமணல் திருட்டு மற்றும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் குறித்தும் சிவசங்கரன் தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் ராஜா நத்தம் அவுட்டர் பகுதியில் உள்ள சிவசங்கரன் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் சிவசங்கரன் புகார் செய்தார். அதன் பேரில் இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனிசாமி வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். முன்னதாக சிவசங்கரனை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி முன்பாக நாம் தமிழர் கட்சியினர்கள் மற்றும் சிவசங்கரனின் உறவினர்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் நத்தம்-திண்டுக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ராஜாவுக்கு சொந்தமான கல்குவாரியில் நின்று கொண்டிருந்த ஹிட்டாச்சி மண் அள்ளும் எந்திரத்தை பெட்ரோல் குண்டு வீசி எரித்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நத்தம் போலீசார் 6 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும் சாணார்பட்டியை சேர்ந்த அங்குராஜ் (25), தினகரன் (37)ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
 

Related News