8 விமானங்கள் இன்று ஒரே நாளில், சென்னை விமான நிலையத்தில் ரத்து.

 

சென்னை- திருச்சி 4 விமானங்கள், திருச்சி- சென்னை 4 விமானங்கள், 8 விமானங்கள் இன்று ஒரே நாளில், சென்னை விமான நிலையத்தில் ரத்து.

இதற்கு பதிலாக இன்று மாலை 3:30  மணிக்கு, சென்னை- திருச்சி, மாலை 6 மணிக்கு திருச்சி- சென்னை சிறப்பு விமானங்கள், இன்று இயக்கப்படுகிறது.

 நிர்வாக காரணங்களுக்காக, இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து தினமும் காலை 6:20, 9:25, பகல் 12 :30, மாலை 6:40 மணி ஆகிய நேரங்களில் 4  விமானங்களும், அதைப்போல் திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8:55, பகல் 12, மாலை 3, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் 4 விமானங்கள் இயக்கப்படும்.

இவ்வாறு ஒரு நாளைக்கு புறப்பாடு விமானங்கள் 4, வருகை விமானங்கள் 4 மொத்தம் 8 விமானங்களை சென்னை- திருச்சி- சென்னை இடையே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தினமும் இயக்கி வருகிறது.

இந்த நிலையில் இன்று, இந்த 8 விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து நேற்று இரவு, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்தது. அதோடு பயணிகளுக்கும் குறுஞ்செய்தி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதோடு  இந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக, இன்று மாலை 3:30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கும், மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னைக்கும், சிறப்பு பெரிய ரக விமானத்தை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்குவதாகவும், விருப்பப்படும் பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டுகளை, அந்த விமானங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனால் பயணிகள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். சில பயணிகள் சிறப்பு விமானத்திற்கு தங்களுடைய முன்பதிவு டிக்கெட்களை மாற்றினார். மற்றும் சிலர் மதுரை விமானங்களுக்கு டிக்கெட்டுகளை மாற்றினார்கள். மேலும் சில பயணிகள், தங்களது விமான டிக்கெட்டை  ரத்து செய்துவிட்டு, கார்கள், ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதைப்போல் திருச்சி பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், நிர்வாக காரணங்கள் காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்காக வருந்துகிறோம் என்று கூறுகின்றனர்.