சாதி பெயரை சொல்லி தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவரை இழிவுபடுத்தியது தொடர்பாக தேசிய துப்பரவு பணியா

 

 

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுகாடு ஊராட்சியில் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் வெங்கடேசன். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், தலைவராக பதவியேற்ற நாள் முதல் அப்பகுதியில் சாதி பிரச்னை மேலோங்குவதாக கூறப்படுகிறது. முன்னாள் ஊராட்சித் தலைவர் உள்பட பிற சமூகத்தைச் சேர்ந்த பலர் இவரை இழிவுப்படுத்தி பணி செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தொடுகாடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் வெங்கடேசன் வரி வசூலிக்க சென்றபோது முன்னாள் ஊராட்சித் தலைவரின் தூண்டுதலால் இவரை சாதி பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர் ஒன்றிய அரசின் தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையத்தில் நேற்று ( ஜூலை.10) புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் இன்று நேரில் வந்து விசாரணை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் அதில் உண்மை இருப்பதாக தெரியவருகிறது. இருப்பினும் இதற்காக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அடங்கிய தனிக்குழு அமைத்து வழக்கு பதிந்து முழு விசாரணை நடத்தப்படும். அதன் பின்னர் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறையினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related News