அதிமுக அலுவலகத்தில் கொள்ளை, போலீஸ் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்

அதிமுக அலுவலகத்தில்  கொள்ளை, போலீஸ் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்

கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை போலீசார் வெளியேற்றி, அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். பின்னர்,  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை போலீசார் வெளியேற்றி, அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். பின்னர், தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார். கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரம், 31 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கம்ப்யூட்டர், வெள்ளி வேல், முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கட்சிக்கு வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், அதிமுக - பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை அசல் பத்திரம், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் என பல்வேறு ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக சி.வி.சண்முகம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Related News