கட்சியில் முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு தடை! நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கும், பிரதான மனு மீதான விசாரணையை செப் 1ம் தேதிக்கும் தள்ளிவைத்துள்ளது.
 அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என இடைக்கால கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட தீர்மானங்களை ரத்து செய்யும்படி பிரதான கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கும், பிரதான மனு மீதான விசாரணையை செப் 1ம் தேதிக்கும் தள்ளிவைத்துள்ளது.



 

Related News