விமான நிலைய கழிவுகளை சுத்திகரிப்பு கருவி மூலம் சுத்திகரித்து

07/11/2018 District

விமான நிலைய கழிவுகளை சுத்திகரிப்பு கருவி மூலம் சுத்திகரித்து  அடையாற்றில் விட மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னை விமான நிலையம் பின்புறத்தில் உள்ள பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் பல ஏக்கர் நில பரப்பில் தேங்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளால் நோய் தொற்றுக்கு ஆளாகும் பொதுமக்கள் . மக்களின் கோரிக்கையையேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா உத்தரவின் பேரில் பம்மல் நகராட்சி ஆணையர் சந்தரா மற்றும் அதிகாரிகள் ஆய்வில் மேற்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள்  குப்பைகள் நீரில்கலந்து வருவதால்  அப்பகுதியில்  அடைப்பு ஏற்பட்டு  காலியிடத்தில் கழிவுகள் தேங்குவதால் அங்கு துறுநாற்றம் வீசுகிறது.  இப்பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள் இக்கழிவுகளை சுத்திகரிப்பு கருவி மூலம் சுத்திகரித்து ஆடையாறு கூவம் ஆற்றில்  விடுவது குறித்தும் , இங்க எத்தனை  சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தாலம் என்பதை குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்தனர். இப்பகுதி பல்லாவரம் கண்டோன்மென்ட் நகரத்தில் வருவதால் இங்கு பணி மேற்கொள்வதில் பம்மல் நகராட்சிக்கு சிக்கலாக இருந்து வந்தது. ஆட்சியர் நடவடிக்கையால் இப்பிரச்சனைகள் தீர்ந்து மக்களின் கோரிக்கை நிறைவேறியது.