முறையான அனுமதி பெறாத குளிர்பானம் மற்றும் உணவுப்பொருட்களை பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண


சிறுவர்கள் குடித்த குளிர்பானத்தைத் தயாரிக்கும் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம், எரா ஹல்லி கிராமம், பொத்தாபுரம் பகுதியில் அமைந்துள்ளது.இந்த குளிர்பானத்தின் மொத்த வியாபாரக் கடை செங்குன்றத்தையடுத்த அலமாதி பகுதியில் அமைந்துள்ளது.கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட அலுவலர்களுக்கு சிறுவர்கள் குடித்த குளிர்பானம் தயாரித்தபோது, தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களைப் பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளோம்.ரூ.10இல் இத்தனை ஆபத்தாசென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறையின் அனுமதி பெறாமல் ரூ.10 என்ற விலையின் அடிப்படையில் பல்வேறு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த குளிர்பானங்கள் குறிப்பாக சிறிய அளவிலான கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளில் வைத்தே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.முறையான அனுமதி பெறாத குளிர்பானம் மற்றும் உணவுப்பொருட்களை பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.குறைந்த விலையில் உணவுப்பாதுகாப்புத்துறையின் அனுமதியில்லாமல் விற்பனை செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கடைகாரர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.மேலும் புதியதாக ஒரு குளிர்பானமோ, பொருளோ விற்பனைக்கு வந்தால் அதனை உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து கடைக்காரர்கள் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்தால், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.மேலும் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்யும் விநியோகஸ்தர்கள் மீது காவல் துறை மூலமாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என அவர் தெரிவித்தார்.

Related News