குப்பை அள்ளுவதில் மெகா ஊழல்; கூடுவாஞ்சேரி கிளார்க்கின் தில்லு முல்லு !

 

குப்பை அள்ளுவதில் மெகா ஊழல்; கூடுவாஞ்சேரி கிளார்க்கின் தில்லு முல்லு !

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் சமிப காலமாக குப்பை அள்ளுவதில் போலி கணக்குகள் மூலமாக லட்சகணக்கில் கையாடல் செய்ததாக அப்போதைய செயல் அலுவலர்கள் மீது ஏகபட்ட புகார்களும் சில செய்தித்தாள்கள் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டதை நாம் அறிந்திருப்போம். 
இது அனைத்தும் உண்மைக்கு புறம்பானதாக கூறப்படுகிறது. இது அனைத்தும் திட்டமிட்டு பரப்பட்ட பொய்யான தகவல் எனவும்,  உண்மை என்னவென்றால் நந்திவரம் கூடுவாஞ்சேரியில் கிளார்க்காக பணிபுறியும் ஆனந்தசைணன் பொய் கணக்குகள் எழுதுவதில் வல்லவாரன இவர் தனியார் பத்திரிக்கையில்  நிருபராக இருக்கும் ஒருவருடன் மிகவும் நம்பிகைக் கூரியவராக இருந்து வருகிறார்.  இந்த நிருபரின் ஆலோசனைப்படி தான் அனைத்து  தில்லு முல்லு வேலைகள் செய்து பல லடசங்கள் கையாடல் செய்துள்ளார் என்பது பேரூராட்சி பகுதியில் பேசப்படுகிறது.இவர்கள் இருவரும் சேர்ந்து குப்பைகள் அள்ளுவதிலும் ஒப்பந்தங்களில் கமிசன் வாங்குவதும் போன்ற பல தில்லு முல்லு வேலைகள் செய்துவதும், இதை அபோதைக்கு பணியில் இருக்கும் செயல் அலுவலரகள் மீது பழி போட்டு விட்டு இவர்கள் தப்பித்து கொள்வது வழக்கமாக உள்ளது.

இவர்களுக்கு ஒத்துவராத செயல் அலுவலர்கள் மீது வின் பழி போட்டு அவர்களுக்கு எதிராக பல செய்தித் தாளில்  தவரான  அவதூறு செய்திகளை பரப்பி அவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தி அவர்களை  இடமாமாற்றம் செய்வது போன்ற செய்கள் மூலமாக இவர்களுக்கென்று தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி இங்கு பணியில் இருக்கும் அனைவரையும் இவர்கள் கட்டுபாட்டில் வைத்துக் கொண்டு இவர்களுக்கு வேண்டாதவர்களை பல பத்திரிக்கை நிருபர்களைக் கொண்டு அதிகாரிகளுக்கு எதிராக செய்தி வெளியிடுவதும் பேரூராட்சியின் முக்கியமான சில ரகசிய ஆவணங்களை கசியவிடுவதுமாக இவர்களின் வாடிக்கையாக உள்ளது. மேலும் பல தில்லு முல்லு வேலைகள் மூலமாக பல லட்சம் ரூபாய் கையாடல் செய்து பத்திரிக்கை நிருபரின் உரவினருக்கு சொந்தமான  தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக பணத்தை பெற்றுக் கொண்டு இவர்களின் பினாமிகள் பெயரில் பத்திரபடுத்தி சாதுரியமாக தப்பித்துக் கொண்டு அடுத்தவர்களை சிக்கலில் மாட்டிவிடும், இவர்களை ஊயர் அதிகாரிகள் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.   

 

 

 

செய்தி தொகுப்பு; 
டைம்ஸ் மீடியா ஆறு. நிஷா

Related News