போரூர் ராமாபுரத்தில் ரூ.3 லட்சம் கேட்டு 2 கல்லூரி மாணவர்கள் கடத்தல்- வங்கி ஊழியர் உள்பட 5 பேர் கை


சென்னை திரும்பிய போது பூந்தமல்லி அடுத்த குத்தவாக்கம் அருகே வந்த போது கார் விபத்தில் சிக்கி லேசாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கார் சேதம் அடைந்ததால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்று இரவு கல்லூரிக்கு சென்று மாணவர் அஷ்ரப், ஆதித்யா இருவரையும் வெளியே வரவழைத்து பேசினார்.
 சென்னை, ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர்கள் ஷயிப் அஷ்ரப், ஆதித்யா டெல்லி, பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தனர். நண்பர்களான இருவரும் கடந்த 19-ந் தேதி திருவேற்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் ரூ.20ஆயிரம் கொடுத்து காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வெளியூர் சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சென்னை திரும்பிய போது பூந்தமல்லி அடுத்த குத்தவாக்கம் அருகே வந்த போது கார் விபத்தில் சிக்கி லேசாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கார் சேதம் அடைந்ததால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்று இரவு கல்லூரிக்கு சென்று மாணவர் அஷ்ரப், ஆதித்யா இருவரையும் வெளியே வரவழைத்து பேசினார்.

அவர்கள் சேதமடைந்த காருக்கு கூடுதல் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். திடீரென மாணவர்கள் அஷ்ரப், ஆதித்யா ஆகிய 2 பேரையும் காரில் ஏற்றி அங்கிருந்து கடத்தி சென்று விட்டனர். கல்லூரி வாசலில் நடந்த இந்த கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாணவன் அஷ்ரப்பின் சகோதரருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கடத்தல் கும்பல் ரூ.3 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே இருவரையும் விடுவிக்க முடியும் என்று கூறி மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ராமாபுரம் போலீசுக்கு மாணவர்கள் 2 பேர் கடத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடத்தல் கும்பல் பேசிய செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள நூம்பல் பகுதியில் கல்லூரி மாணவர்களை கடத்தி வைத்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் கல்லூரி மாணவர்கள் அஷ்ரப், ஆதித்யா ஆகிய 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட வெங்கடேசன் மற்றும் அவனது கூட்டாளிகளான திருவேற்காட்டை சேர்ந்த சந்தோஷ்குமார் (26) வானகரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ்குமார் (30) வடபழனியை சேர்ந்த பார்த்திபன் (27) ராமாபுரத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் சரத் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Related News