பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நிறுத்த புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது அரசு

 

பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நிறுத்த புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது அரசு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உணவு இடைவேளைக்காக  விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியிலுள்ள குறிப்பிட்ட ஐந்து உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

அந்த உணவகங்கள் போல பல உணவகங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்தநிலையில், அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் நெடுந்தூரம் இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட உணவகங்களில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக பேருந்துகளை நிறுத்துவது வழக்கம். தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதாக புகார் எழுந்த நிலையில் போக்குவரத்துத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.