கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பகுதியில் இருந்து விரட்ட முயற்சி நடப்பதாகவும், ஆட்சியரி

 

திருவள்ளூர்: கடந்த 30 ஆண்டு காலமாக, தங்களது நிலத்திற்கு வரி கட்டி, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளுடன், பட்டியலினத்தை சேர்ந்த வாசு-முருகம்மாள் தம்பதியினர் ஓலை குடிசையில் வசித்து வந்துள்ளனர். இவர்களை அவ்விடத்தை விட்டு வெளியேரும்படி, மாற்று சமூகத்தினர் அடித்து விரட்ட முயற்சிப்பதாக, பாதிக்கப்பட்ட ஏழைத் தம்பதியினர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

குடிசை இடிப்பு“திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டன்சேரி கிராமத்தில் பேரம்பாக்கம் தண்டலம் நெடுஞ்சாலை ஓரத்தில் குடிசை போட்டு கடந்த 30 ஆண்டு காலமாக வசித்து வருகிறோம்.எங்களது வீட்டின் பின்புறம், நிலம் வைத்து பயிர் செய்துவரும் மாற்று சமூகத்தார், கடந்த சில மாதங்களாக எங்களை அங்கிருந்து வெளியேற கோரி நெக்கடி கொடுத்து வருகின்றனர்.சமீபத்தில் அந்த நில உரிமையாளர், உற்வினருடன் சேர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் எங்களது குடிசையை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். 
எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை“மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம்.மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில், தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை” என கண்ணீருடன் தெரிவித்தனர்.