ஆவடி மாநகராட்சியில் பித்தலாட்டம், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பில்டிங் கட்டி முடித்த பிறகுதான், அனுமதி கொடுப்பார்களா ? ஆவடி மாநகராட்சியில் பித்தலாட்டம், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் உள்ள நகரமைப்பு பிரிவில் பல தில்லு முல்லு நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் முன் வைத்து வருகின்றனர், இது குறித்து மாநகராட்சி ஆணையர் செவிசாய்பதில்லை என்கிறார்கள். ஓரு தனி நபர் வீடு கட்ட வேண்டுமென்றால், முதலில் ஆவடி மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவில் அனுமதி வாங்க வேண்டும், ஆனால் இங்குள்ள தனியார் வணிகா வளாகம் பில்டிங் கட்டி முடித்த பிறகுதான் அனுமதி கொடுத்துள்ளனர், ஆவடி மாநகராட்சிக்கு பின்புறம் உள்ள சுமங்கலி உரிமையாளர் பரத் நிறுவனத்திற்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் கட்டிய பிறகு மாநகராட்சி அதிகாரிகள்  அனுமதி வழங்கி உள்ளார்கள். இக்கட்டிடத்தில் முழுக்க முழுக்க விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். சாதாரண மக்களுக்கு ஒரு நீதி, பணம் படைத்த ஒரு நீதியா? என கேள்விகளை முன் வைத்தனர். இக்கட்டிடத்தின் மீதும், அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கத்திற்கு மாறாக கட்டிய கட்டிடத்திற்கு சீல் வைக்க வேண்டும் என்று,  ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் அவர்கள், இது போன்ற  முறையற்ற கட்டிடத்திற்கு அனுமதி அளித்து போல், ஆவடி மாநகராட்சி முழுவதும் உள்ள கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது, இதன் மீது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடி தேவை என்றனர்.