அத்துமீறி இரவு நேரங்களில் மண் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள்,

அத்துமீறி இரவு நேரங்களில் மண் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், 
லாரிகளை சிறைபிடித்து காவலர்களிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
ஆந்திரம் மாநிலம், சித்தூர் மாவட்டம் சத்தியவேடு அடுத்த, தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஊத்துக்கோட்டை அருகில் சென்னேரி கிராமத்தில் கிராவல் மண் எடுக்க 2,420 பரப்பளவில் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் விடபட்டுள்ளது, இப்பகுதியில் மண் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள்,  அரசாங்கத்தின் கட்டுபாட்டை மீறி இரவும் பகலும் மண் எடுப்பதாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி லாரிகளை சிறைப்பிடித்தனர். 
இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,  தகவல் அறிந்த சத்தியவேடு காவல் ஆய்வாளர் சிவக்குமார்ரெட்டி விரைந்து வந்து அப்பகுதி மக்களின் கோரிக்கையையேற்று லாரிகளின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசுவதாக கூறி பொதுமக்களை சமாதனம் செய்து வைத்து அனுப்பிவைத்தார். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது. இதுபோன்ற அத்துமீறல்களை, மாவட்ட ஆட்சியர், தாசில்தார் மற்றும் சுரங்க அதிகாரிகள், அமலாக்கம் அதிகாரிகள், எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யாதது ஏன் என்று பொதுமக்களின் வேதனையாக உள்ளது.