உலக அமைதி இயக்கத்தின், 14 வது ஸ்தாபன விழா: திருவேற்காடு மகரிஷி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் நட

உலக அமைதி இயக்கத்தின், 14 வது ஸ்தாபன விழா: திருவேற்காடு மகரிஷி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்; திருவேற்காடு மகரிஷி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சீனியர் செகண்டரி பள்ளியில், குரு பௌர்ணமி விழா மற்றும் மகரிஷி உலக அமைதி இயக்கத்தின், 14 வது ஸ்தாபன விழா, பள்ளியின் முதல்வர் டாக்டர், டி.சுப்ரபாசிங் தலைமையில் பள்ளிவளாகத்தில் நடைபெற்றது. 
இநநிகழ்ச்சியில் தமிழ் புலமை மற்றும் சமஸ்கிருத பட்டம் பெற்ற ஆவடி வைகனச ஆகம பாடசலையின் முதல்வர் கே.மோகன் மற்றும் முதுகலை பொருளாதார பட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற ஆழ்நிலை தியானப் பயிற்சியாளர் வித்யாபிரியா ஆகியோர் முன்னிலையில் கொண்டாடபட்டது. 
   இதில் சிறப்பு விருந்தினர் கே.மோகன் குரு பௌர்ணமி கொடண்டாடப்படுவதின் காரணம் மற்றும் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு விளக்கினார். குரு மற்றும் மாணவர்களின் உறவு முறைகள் எப்படி அமையவேண்டும் என்பது குறித்து சிறப்பு விருந்தினர் வித்யாபிரியா உரையாற்றினார். 
  மகரிஷி பள்ளியின் முதல்வர் டாக்டர், டி.சுப்ரபாசிங் பேசுகையில் நம் பள்ளியின் தலைமை நிர்வாகியான பிரம்மச்சாரி கிரீஷ் அவர்களின் பொன்னான மொழிகளை எடுத்துரைத்து விளக்கினார், குரு பௌர்ணமி நன்னாளில் மட்டுமல்லாமல் எப்போதும் தங்கள் குருவிற்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் குரு நமக்கு கற்றுத்தந்த அறிவையும், வாழ்வியல் தத்துவங்களையும் என்றென்றும் நாம் கடைபிடித்தும், குருவை வாழ்நாள் முழுவதும் போற்ற வேண்டும் என்று அறிவுறிதினார். 
 மேலும் மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோர்களை மதித்து ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்பது குறித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடினர்.