அரசின் உத்தரவை மீறி 100% கல்விக்கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவ


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "மாவட்டத்தில் செயல்படும் மழலையர், நர்சரி, மெட்ரிக் பள்ளிகள், பிற வாரியத்தில் இணைப்புப் பெற்ற பள்ளிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகளில் வழங்கப்பட்ட அறிவுரைகளை மீறி கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தம் செய்யக்கூடாது.
இதனை மீறி 2021- 2022ஆம் கல்வியாண்டிற்கான 100 விழுக்காடு கல்விக் கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்த புகார்களை matricfeecomplaintceotlr@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் பெற்றோர், பொதுமக்கள் தெரிவிக்கலாம்.சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி 2019-2020ஆம் கல்வியாண்டில், 85 விழுக்காடு கல்விக் கட்டணத்தை 2021-2022ஆம் கல்வியாண்டில் ஆறு தவணையாகப் பெற்றோர் செலுத்தலாம். கடைசி தவணையை 2022 பிப்ரவரி 1ஆம் தேதிக்கு முன்னர் செலுத்த வேண்டும்.தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் உத்தரவை மீறி மாணவர்களிடம் 85 விழுக்காட்டிற்கும் அதிகமான கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகள் மீது விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.