குறுகலான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளூர் பேருந்து நிலையத்தை மாற்று இடத்தில் அமைத்துத

 


செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டம் கடந்த 1997ஆம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரம் அமைக்கப்பட்டு அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம், தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அனைத்துதுறை அலுவலகங்களும் அமைக்கப்பட்டன.

அரசுப் பேருந்துகளின் தேவைகள்மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவை தொகுதி மக்களும் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி அலுவலகம், சிறுபான்மை துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, வேளாண்மை துறை, வருவாய்த்துறை என பல்வேறு துறைகளுக்கு வந்து செல்ல பேருந்து வசதி தேவைப்படுகிறது.மேலும், இங்கே பணிபுரியும் அரசு ஊழியர்கள், தனியார் ஒப்பந்த ஊழியர்கள் என ஏராளமானோர் தினசரி பேருந்தில் வந்து செல்கின்றனர். இது தவிர திருவள்ளுரை சுற்றி தொழிற்பேட்டைகள் மருத்துவமனைகள், பிரசித்தி பெற்ற கோயில்கள், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் பேருந்தில் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.திருவள்ளூர் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் சொந்த தேவைகளுக்காக பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். இவ்வளவு பயணிகள் பயணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூர் பேருந்து நிலையம் ராஜாஜி சாலையில் மிகவும் குறுகலான இடத்தில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் மொத்தமாக ஒரே நேரத்தில் 10 பேருந்துகளுக்கு மேல் நிறுத்த முடியாத நிலை உள்ளது.சமூக ஆர்வலர்கள் கோரிக்கைஇங்கிருந்து தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்பேடு, தாம்பரம், பூவிருந்தவல்லி, பொன்னேரி, திருத்தணி, திருப்பதி, ஊத்துக்கோட்டை, சத்தியவேடு, திருச்சி, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் கடும் இட நெருக்கடியும், பேருந்து நிலைய பகுதிகளில் தொடர் விபத்தும் ஏற்பட்டு வருகிறது.மாவட்டத்தின் தலைநகராக உள்ளதால் இங்கிருந்து கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், கொடைக்கானல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஐசிஎம்ஆர் பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.பின்னர், அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டதை அடுத்து சமூக விரோதிகள் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். இதனையறிந்த வருவாய்த் துறையினர் ஆக்கிரமிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கான இடத்தை மீட்டு அங்கே இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ஆக்கிரமிக்கப்படும் அரசு நிலங்கள்ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டனர்.தற்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மருத்துவக் கல்லூரி கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் இப்பணியை முடிவடைந்து மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் நிலை உள்ளது. அப்படி திறக்கப்பட்டால் மாவட்டம் முழுவதும் இருந்து பேருந்து மூலமாக மக்கள் வர வேண்டிய நிலை உள்ளது.அப்படி வரும்போது அவர்கள் குறுகலான பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து மாற்று பேருந்து அல்லது ஆட்டோக்களை பிடித்து மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசு இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு உடனடியாக திருவள்ளூர் புதிய பேருந்து நிலையத்தை அமைத்து தர வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேருந்து நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க கோரிக்கைமேலும் பேருந்து நிலையம் அமைக்கப்படுவதை தாமதப்படுத்தும் நிலையில் ஆக்கிரமிப்பாளர்களால் மீண்டும் அந்த இடம் ஆக்கிரமிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் எனவே இது குறித்து அரசு உடனடியாக முடிவு செய்து பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர் வெங்கடேசன் கூறும்போது, “இடநெருக்கடி, கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுவது உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ள பேருந்து நிலையத்தை மாற்றி தமிழ்நாடு அரசால் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே ஒதுக்கீடு செய்யப்பட்ட பேருந்து நிலையத்திற்கான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.