தமிழகம் முழுவதும் 22 லட்சம் தேர்வர்கள் பங்கேற்பு 7639 மையங்களில் எழுதினார்கள்.

தமிழகம் முழுவதும்  22 லட்சம் தேர்வர்கள் பங்கேற்பு 7639 மையங்களில் எழுதினார்கள்.

 நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளும் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மொத்தம் 131 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள்.  அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 குரூப்-4 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்து இருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளும் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மொத்தம் 131 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 639 மையங்களில் நடந்தது. சென்னையில் 503 மையங்களில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.
லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் தேர்வு எழுத வந்ததால் அவர்கள் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாநகரம், நகர்ப்புறங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் 2500 பஸ்கள் இயக்கப்படும். இன்று 3 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்கள் வழியாக சென்ற அனைத்து பஸ்களும் அந்த பகுதியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தேர்வு எழுத வந்தவர்களுக்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் முன்கூட்டியே தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வு 9 மணிக்கு தொடங்கும். ஆனால் 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்து விட வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல இடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் 9 மணிக்கு பிறகு தேர்வு எழுத வந்தார்கள் அவர்களை தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கவில்லை.
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் பொன்னேரியில் உள்ள உலக நாதன் கல்லூரி, ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி, பாரத் மெட்ரிக் பள்ளி, வேலம்மாள் பள்ளிஆகிய மையங்களில் தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காததால் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து விரட்டி விட்டனர். சென்னை புதுக்கல்லூரி, நீலாங்கரையிலும் தாமதமாக வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் தேர்வு எழுத முடியவில்லையே என்ற தவிப்புடன் சென்றனர். காலை 9.30 மணி முதல் பகல் 12.30 வரை தேர்வு நடந்தது. முன்கூட்டியே தேர்வை எழுதி முடித்தவர்களும், 12.30 மணிக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். தேர்வு எழுதி முடித்த பிறகு ஓ.எம்.ஆர். தாளில் இடது கை பெருவிரல் ரேகையை ஒவ்வொரு வரும் பதிவு செய்தனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 7689 மையங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. 7689 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் 1,10,150 கண்காணிப்பாளர்கள் 534 பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள்.