நடுரோட்டில் வேன் கவிழ்ந்து 15 தொழிலாளர்கள் படுகாயம் சத்தியமங்கலம் அருகே

 
 அப்போது டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலைதடுமாறிய வேன் ரோட்டில் கவிழ்ந்து விபத்தானது. இதில் வேனில் இருந்த 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து அலறினார்கள். இதுபற்றி தெரிய வந்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சத்தியமங்கலம் வடவள்ளி கிராமத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் வாழைக்காய் வெட்டுவதற்காக இன்று காலை ஒரு வேனில் சிக்கரசம்பாளையம் கிராமத்துக்கு புறப்பட்டனர். வேன் காலை 7.30 மணி அளவில் வடவள்ளி முருகன் கோவில் மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலைதடுமாறிய வேன் ரோட்டில் கவிழ்ந்து விபத்தானது. இதில் வேனில் இருந்த 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து அலறினார்கள். இதுபற்றி தெரிய வந்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் காயம் அடைந்த நடராஜ் (30), கதிர்வேல் (36), தங்கவேல் (30), ரெங்கசாமி (33), துரைசாமி (38), சுரேஷ் (39), அம்மாசை (46), சுரேஷ் (38), திலகா (36), சித்ரா (31), சக்திவேல் (37), தங்கமணி (36), வைத்தீஸ்வரி (35) உள்பட 15 பேரை மீட்டு சிகிச்சைக்காக 6 ஆம்புலன்ஸ்கள் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே கிராமத்தை சேர்ந்த 15 பேர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த தகவல் தெரிய வந்ததும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்களது உறவினர்கள் ஏராளமான பேர் திரண்டு வந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதியது. இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

\