குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் விடுதிகள், அனைத்து அருவிகளிலும் த

குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் விடுதிகள், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது

சுற்றுலா பயணிகளை நம்பி கடைகளை அமைத்துள்ள வியாபாரிகள் அனைவருக்கும் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் குற்றால பகுதிகளைச் சுற்றிலும் அமைந்துள்ள சொகுசு விடுதிகள் அனைத்தும் ஆகஸ்ட் 10-ந் தேதி வரையில் முழுமையாக புக்கிங் செய்யப்பட்டுள்ளதால் சொகுசு விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால் சீசன் களை கட்டியுள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை நம்பி கடைகளை அமைத்துள்ள வியாபாரிகள் அனைவருக்கும் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் குற்றால பகுதிகளைச் சுற்றிலும் அமைந்துள்ள சொகுசு விடுதிகள் அனைத்தும் ஆகஸ்ட் 10-ந் தேதி வரையில் முழுமையாக புக்கிங் செய்யப்பட்டுள்ளதால் சொகுசு விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
தங்கும் விடுதிகள் பெரும்பாலும் நிரம்பியதால் குடும்பங்களாக வரும் பல சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே மர நிழல்களில் தங்கி உணவை சமைத்து உண்டு குற்றால சீசனை அனுபவித்து வருகின்றனர். எனவே குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் தமிழக அரசு மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து தங்கும் விடுதிகளை அதிகளவில் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அருவி பகுதியில் மிகவும் குறைந்த அளவிலேயே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களும் பணிச்சுமையால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குற்றால அருவிகளில் அதிகப்படியான போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.