அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பரணிபுத்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு

04/15/2018 District

கோடை வெப்பத்தை தனிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பரணிபுத்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு 
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூர் ஊராட்சியில்  ஊராட்சி கழக செயலாளர் எம். வெங்கடேசன் ஏற்பாட்டில் கொளத்தூவான் சேரி பகுதியில்   தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் மாவட்ட கழக செயலாளர் மொளச்சூர் இரா.பெருமாள்  திறந்து வைத்தார். இதில் நீர் மோர் தர்பூசனி, வெள்ளரிக்காய் மற்றும் குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். உடன் மாவட்ட அவைத் தலைவர் முத்தைய்யா ஒன்றிய கழக செயலாளர் மலைப்பட்டு  ராதகிருஷணன், விஜயா உட்பட கட்சியினர் ஏறாளமானோர் பங்கேற்றனர்.