கோவை ரேஸ்கோர்ஸ் சாலைக்கு வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் சமீரன்உற்சாகமாக

கோவை ரேஸ்கோர்ஸ் சாலைக்கு வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் சமீரன்உற்சாகமாக வரவேற்றனர்.

 

இதனை தொடர்ந்து ஒலிம்பியாட் ஜோதி, 40 நாட்களில் 26 மாநிலங்களில் உள்ள 75 நகரங்களுக்கு பயணித்து இறுதியாக மாமல்லபுரம் வருகிறது. பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை அந்த மாநிலத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி புதுச்சேரியில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்திற்கு இன்று காலை வந்தடைந்தது. கோவை ரேஸ்கோர்ஸ் சாலைக்கு வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா கமிஷனர் பிரதாப் ஆகியோர் மேள, தாளங்கள், பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழக அரசு பல வேறு ஏற்பாடுகளை செய்து உள்ளது. மேலும் மக்களிடமும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 19-ந் தேதி டெல்லி இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்து, ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து ஒலிம்பியாட் ஜோதி, 40 நாட்களில் 26 மாநிலங்களில் உள்ள 75 நகரங்களுக்கு பயணித்து இறுதியாக மாமல்லபுரம் வருகிறது. பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை அந்த மாநிலத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி புதுச்சேரியில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்திற்கு இன்று காலை வந்தடைந்தது. கோவை ரேஸ்கோர்ஸ் சாலைக்கு வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா கமிஷனர் பிரதாப் ஆகியோர் மேள, தாளங்கள், பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி ரேஸ்கோர்சில் இருந்து ஊர்வலமாக கே.ஜி.தியேட்டர், செஞ்சிலுவை சங்கம், அவினாசி சாலை வழியாக கொடிசியாவுக்கு சென்றது. செஸ் ஒலிம்பியாட் ஜோதியை செஸ் வீரர்கள் 2 பேர் கையில் பிடித்து கொண்டு இசைக்கருவிகள் முழங்க காரில் பயணமாகினர். அவர்களை பின்தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் செஸ் போட்டி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் பிடித்த படி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து ரேஸ்கோர்சில் இருந்து கொடிசியா வரை மாரத்தானும் நடைபெற்றது.

கொடிசியா மைதானத்திற்கு சென்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவேற்றனர். மேலும் குதிரை, மாடு, மயில் போன்ற உருவங்களும் அங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 5 அமைச்சர்கள் பங்கேற்றனர். அங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு திறந்து வைக்கப்பட்டது. மேலும் வண்ண,வண்ண பலூன்களும் பறக்க விடப்பட்டு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கோவையில் வரவேற்பு முடிந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி திருப்பூருக்கு செல்கிறது. பின்னர் ஈரோடு, சேலம் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று சென்னை சென்றடைகிறது.