புதிதாக கட்டப்பட்டு வரும் 11 அரசு மருத்துவமனைக் கல்லூரிகளில், நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை

 

 

சென்னை: டி.எம்.எஸ்., வளாகத்தில், உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மருத்துவம் மற்றம் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர், "3ஆவது அலை வந்தால், அது குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் இருக்கிறது. எல்லா அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கரோனா சிகிச்சை மையம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் முழுமையாக பேரிடர் கட்டுப்பாட்டை கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும்.

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிவிரும்பிய நாளில் குழந்தையை பெற்று எடுப்பது தற்போது அதிகமாகி வருகிறது. கர்ப்பக்காலம் முழுமை அடைந்தால் மட்டுமே முழு திறனுள்ள குழந்தை பிறக்கிறது. இயற்கைக்கு மாறாக குழந்தையை பெற்று எடுப்பது படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். 60 விழுக்காடு குழந்தைகள் இயற்கையாக குறிக்கப்பட்ட தேதியில் பிறக்கிறன. இதை 80 விழுக்காடாக மாற்ற தமிழ்நாடு அரசு செயல்படும்.தனியார் மருத்துவமனைகளில் இயற்கைக்கு எதிரான இது போன்ற விஷயங்கள் பணத்திற்காக அதிகமாக நடைப்பெற்று வருகிறது. 
கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு யோக, மூச்சு பயிற்சி ஆகியவற்றை வழங்க அரசாங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர், "புதிதாக கட்டப்பட்டு வரும் 11 மருத்துவமனைகளின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு வருகிறோம். அவைகளில் இந்தாண்டே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இரண்டு நாள் கழித்து ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி ஏற்றவுடன் அவரிடம் கலந்து பேசி மாணவர் சேர்க்கை குறித்து தெரிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Related News