கலைஞரின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் கால் பந்து

07/02/2017 District

சென்னை அடுத்த திருவேற்க்காடு நகரம் அயனம்பாக்கம் அம்பேத்கார் விளையாட்டு திடலில் திருவள்ளூர் தெற்க்கு மாவட்டம் வர்த்தக அணியின் சார்பில் கலைஞரின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் கால் பந்து விளயாட்டுப் போட்டி வர்த்தக அணி அமைப்பு செயலாளர் எ.ஜெ.பவுல் ஏற்ப்பாட்டில் நடை பெற்றது. இதில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்டச் செயலாளர் ச.மு.நாசர் ஆகியோர் பங்கேற்று  விளயாட்டினை துவக்கி வைத்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 7 லட்சம் மதிப்பீட்டில் புள்ளட் மோட்டார் வண்டி மற்றும் தங்க நாணயங்கள் வழங்கினர்