டி20 உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தி

 

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஆண்கள் டி20 உலகக் கோப்பை அணிப் பிரிவுகள் குறித்த பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
எஞ்சிய நான்கு இடங்களை பிடிக்க மீதமுள்ள எட்டு அணிகள் மோதுவுள்ளன. இந்த எட்டு அணிகளும் முதல் சுற்றில் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மோதவுள்ளன.அதன்படி, ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய நான்கு அணிகளும், பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய நான்கு அணிகளும் இடம்பெற்றுள்ளன.தவிர, குரூப் 1இல் வெஸ்ட் இண்டீஸ், 
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மற்றும் தகுதிச் சூற்றிலிருந்து தகுதி பெறும் குரூப் ஏ வின்னர், குரூப் பி ரன்னர் அணி ஆகியவையும் இடம்பெறும்.இரண்டாம் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் குரூப் பி வின்னர் அணியும் குரூப் ஏ ரன்னர் அணியும் இதே பிரிவில் இடம்பெறும். இந்நிலையில், இந்திய, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து முன்னதாகப் பேசிய ஐசிசி தலைமை நிர்வாகி ஜெஃப் அலார்டிஸ், "2021 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான குழுக்களை அறிவிப்பதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும், உலகக்கோப்பை நடைபெறும் இந்த மூன்று மாதங்களில் பல சிறந்த கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் கண்டு களிக்கலாம் எனவும் தெரிவித்தார்.