கொங்கு நாடு பிரிந்தால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் என்றும், நடைமுறையில் அது சாத்தியமில்லாத

 


சென்னை: இந்திரா நகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் பக்கிங்ஹாம் கால்வாய் மேம்பாட்டுத் திட்டத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஆய்வுசெய்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என். நேரு, "மழைக்காலம் வருவதால் ட்ரோன் மூலமாக கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மேலும் அதிகத் திறன்கொண்ட இயந்திரங்கள் மூலம் ஆகாயத் தாமரையை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.

சென்னையில் உள்ள 141 கிலோமீட்டர் கால்வாய்களைச் சரிசெய்யும் பணி நடைபெற்றுவருகிறது. சேத்துப்பட்டில் ஒரு எம்எல்டி அளவில் மறுசுழற்சி மையம் அமைத்து சாக்கடை நீரை சுத்தமான நீராக மாற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.ரூ.1400 கோடி செலவில் மழைநீர் வடிகால்

சென்னையில் மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க தண்ணீர் நிற்கும் இடங்களைக் கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது. கொசஸ்தலை ஆற்றின் டெண்டர் 21 பேர் எடுத்துள்ளனர். வளைவுப் போக்குவரத்துச் சரியாக உள்ளதா என ஆய்வுமேற்கொண்டு பணிகளை முடிக்கவுள்ளோம்.மேலும் 1400 கோடி ரூபாய் செலவில் தென்சென்னையில் மழைநீர் வடிகால் பணியும் டெண்டர் மிக விரைவில் நடைபெற உள்ளது.கே என் நேரு ஆய்வு
நடைமுறையில் சாத்தியமில்லாத காரியம் கடந்த ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் முறைகேடுகள் ஆய்வில் உள்ளது. முந்தைய அரசு கொண்டுவந்த திட்டங்களை நிறுத்த வேண்டும் என்ற சிறிய எண்ணம்கூட முதலமைச்சரிடம் இல்லை. கொங்கு நாடு பிரிந்தால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும்.நடைமுறையில் சாத்தியமில்லாத காரியம். ஒருநாள் வலைதள ட்ரெண்டிங்குக்காகச் செய்துள்ளனர். சிங்காரச் சென்னை திட்டத்தில் முழுவிவரத்தையும் முதலமைச்சர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விரைவில் அறிவிப்பார்" எனத் தெரிவித்தார்

Related News