கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து காவல் துறையினர் பலத்த கண்காணிப்ப

 

 

கோயம்புத்தூர்: மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று (ஜூலை.16) காலை ஏழு மணியளவில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைப்பதாக கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு காவலர்கள், மத்திய ரயில்வே பாதுகாப்புப் படை, வெடிகுண்டு கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் ஆகியோர் மோப்ப நாய் உதவியுடன் அங்குள்ள பயணிகளையும் ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களையும் சோதனை செய்தனர். 
கோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகள்தொடர்ந்து செல்போன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தவர் குறித்து விசாரித்தபோது, அந்நபர் கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பதும், மதுபோதையில் அவர் பேசியதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர். எனுனும் கோவை ரயில் நிலையத்தில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.