தீவிர காசநோய் கண்டுபிடிப்பதற்கான நவீன எக்ஸ்ரே வாகனம் அறிமுகம்

04/18/2018 news

தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமணையில்  தீவிர காசநோய் கண்டுபிடிப்பதற்கான நவீன எக்ஸ்ரே  வாகனம் அறிமுகம்
 தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமணையில் பன் மருந்து எதிற்ப்பு காச நோயிக்கான குறுகிய கால சிகிச்சை முறை மற்றும் தீவிர காசநோய் கண்டுபிடிப்பதற்கான நவீன எக்ஸ்ரே உடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனம் அறிமுக விழாவில் மக்கள் நல் வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்   கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் ஸ்ரீபெரும்புத்தூர் நாடளுமன்ற உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாடு சங்க திட்ட இயக்குனர் செந்தில்ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.பொன்னையா, இந்தியாவிற்கான உலக சுகாதார நிறுவன திட்ட அலுவலர் ரஞ்சினி ராமச்சந்திரன், ஸ்ரீபெரும்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், காஞ்சி பன்னீர் செல்வம், தாம்பரம் நெஞ்சகநோய் மருத்துவமணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் மற்றும் மறுத்துவ உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.