இன்று முதல் ரமலான் நோன்பு துவங்கி இருப்பதால், இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி

06/28/2017 Video News

இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு இன்று முதல் துவங்கி இருப்பதால், இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பிறை கணக்கீடுகளின்படி, ஆண்டுதோறும் 30 நாட்கள் ரமலான் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு இன்று முதல் துவங்கி உள்ளது. ரமலான் மாதத்தில் பகல் முழுவதும் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள், இரவு நேரங்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். இதனையடுத்து ரமலான் மாதம் முடிந்த பின்னர், ரம்ஜான் பண்டிகையை உறவினர்களுடன் இணைந்து கொண்டாடுவர். மேலும் நோன்பு நாட்களில் ஜக்காத் என்னும் தர்மத்தை ஏழைகளுக்கு அதிகமாக வழங்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அடையார் மசூதி இமாம் சதாத் கூறியதாவது.