எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்’ - மக்கள் நீதி மய்யம் மௌரியா

 

 

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஒன்றிய, மாநில அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 10) நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மநீம துணைத் தலைவர் ஏ.ஜி.மெளரியா தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தினர் கலந்துகொண்டனர்.

அப்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை 2011இல் இருந்து 2021ஆம் ஆண்டுவரை கண்ட விலை ஏற்றப்பட்டியலை, பதாகைகள் மூலம் ஏணி வடிவில் வடிவமைத்திருந்தனர்.நூதன முறை ஆர்ப்பாட்டம்சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, செங்கலில் அடுப்பு போல் வடிவமைத்து தீ மூட்டுவதுபோல நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மநீம தொண்டர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மநீம தொண்டர்கள்பின்னர் மநீம துணைத்தலைவர் மௌரியா செய்தியாளர்களை சந்தித்தார்.வீதியில் இறங்கி போராட்டம்அப்போது அவர் பேசுகையில், "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி வீதியில் இறங்கியுள்ளோம். உருமாறிய மக்கள் நீதி மய்யம், மக்கள் இயக்கமாக போராட்டத்தில் குதித்திருக்கிறது. வரி மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கும் அரசுகளால், ஏழை மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்.கரோனா காலமென்பதால் கமல் ஹாசன் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர் கலந்துகொண்டால், அதிக நபர்கள் கூடி கரோனா பரவல் அதிகமாக வாய்ப்புள்ளது.அடையாளம் வியாபார பொருளாக மாற்றம்திமுகவில் இணைந்த பத்மபிரியா, மகேந்திரன் ஆகியோர் யார் என்றே அடையாளம் தெரியாமல் இருந்தவர்கள். இப்போது மக்கள் நீதி மய்யம் மூலமாக அடையாளத்தைப் பெற்றவுடன், அதனை வியாபாரப் பொருளாக்கி பிற கட்சியில் அவர்கள் இணைந்துள்ளனர்.செய்தியாளர்களிடம் பேசிய மநீம துணைத்தலைவர் மௌரியாஇதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் எங்கு இருந்தாலும், நன்றாக இருக்கட்டும். ஆனால், கமல் ஹாசனுக்கு நன்றியுடன் இருக்கட்டும்" என்றார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய மூன்று வருடங்களில், இதுவே முதல் ஆர்ப்பாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு

Related News