மு.க.ஸ்டாலின் மகேந்திரன் திமுகவில் இணையும் நிகழ்வை வரவேற்றுப் பேசினார்.

மு.க.ஸ்டாலின் மகேந்திரன் திமுகவில் இணையும் நிகழ்வை வரவேற்றுப் பேசினார்.

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா...மகேந்திரன், அவரது ஆதரவாளர்கள் ஆகியோரை வரவேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிவிப்பு வரும் போதே இதை எதிர்பார்த்ததாகவும்; ரஜினி வசனம் போல லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா மகேந்திரன் வந்திருப்பதாக தெரிவித்தார்.கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாதது வருத்தம்தான் எனவும், இச்சம்பவம் தேர்தலுக்கு முன்னரே நடந்திருந்தால், கோயம்புத்தூரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியும் என்றார்.மகிழ்ச்சியுடன் இணைகிறேன்நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன், "இன்னும் இருபது ஆண்டுகள் திமுகவை அசைக்க முடியாது என மக்கள் கூறும் அளவிற்கு இரண்டு மாதங்களில் மு.க.ஸ்டாலின் உழைத்துள்ளார்.சித்தாந்தம், கொள்கை, செயல்பாடு என அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, மிக்க மகிழ்ச்சியுடன் திமுகவில் இணைந்து இருக்கிறேன்" என்றார்.மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா மற்றும் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறிய முக்கிய நிர்வாகிகள் 78 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.அதேபோல திமுகவில் இணைய விரும்புகின்ற 11,188 உறுப்பினர்களின் பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பை மு.க.ஸ்டாலினிடம் மகேந்திரன் வழங்கினார்.

Related News