தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

 

 

மாணவர்கள் இணையவழி மூலம் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுவதை அடுத்து விரைவில் பள்ளிகளைத் திறக்குமாறு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்து மனு அளித்துள்ளார். தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டி.சி. இளங்கோவன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

அம்மனுவில், "மாணவர்கள் இணையவழி வாயிலாகப் பாடங்களைக் கற்பது அவர்களுக்கு முழுமையான நிறைவை அளிக்காது. ஆசிரியர்கள் மூலம் நேரடியாக வகுப்பறையில் கற்பதன் மூலம்தான் மாணவர்கள் பாடங்களை எளிமையாகப் புரிந்துகொண்டு கற்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும். இதனைக் கருத்தில்கொண்டு வல்லுநர் குழு அமைத்துப் பள்ளிகளை உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளோடு விரைவாக திறப்பதற்கு ஆவன செய்ய கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.இதன் அடிப்படையில் மாணவர்களின் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு விரைவாகப் பள்ளிகள் திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.