60 பதுக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பாடல்கள் பாடிய ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் அப்தூல் ஜா

 

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவு சம்பந்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, மழைநீர் சேமிப்பு மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொரோனா 19 தடுப்பு உள்பட 60 விழிப்புணர்வு பாடல்கள் பாடி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் கூடுதல் பொறுப்பாளர் அப்துல் ஜாபர் அவர்கள் எழுதி பாடிய மைக்காக ( future Kalam Book of achievers) என்ற தனியார் நிறுவனம் உலக சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்து இவ்விருதினை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர்   வழங்கினார். 
இவ்விருதினை பெற்ற ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் கூடுதல் பொறுப்பாளர் அப்துல் ஜாபர் அவர்களுக்கு   தமிழ்நாடு துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்கள்   மாநில சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் மாநில இணைச்செயலாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர். 
இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையாளர் நாராயணன், பொறியாளர் வைத்தியலிங்கம், மருத்துவ அலுவலர், அசின் துப்புரவு ஆய்வாளர்கள், கிரீன் வாரிய மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர் தமிழ்நாடு துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.