முன்னாள் முதலமைச்சர், அந்தச் சலுகைகள் மட்டும்போதும் என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பி.எஸ். எடியூரப்பா தனது பதவியை துறந்த நிலையில், புதிய முதலமைச்சராக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவிற்கு கேபினெட் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனைப் பெற மறுத்துள்ள பிஎஸ் எடியூரப்பா, “எனக்கு கேபினெட் அந்தஸ்து வழங்கும் உத்தரவை வாபஸ் பெற்றுவிடுங்கள். எனக்கு முன்னாள் முதலமைச்சருக்கு உரிய சலுகைகள் மட்டும் போதும்” என்று கூறியுள்ளார்.சென்ற ஜூலை 26ஆம் தேதியன்று ராஜினாமா செய்த எடியூரப்பாவுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து போன்ற வசதிகளை வழங்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சனிக்கிழமை (ஆக.7) உத்தரவிட்டார்.தொடர்ந்து, எடியூரப்பா பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையால் முன்மொழியப்பட்டார். இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்நிலையில் இந்தப் பதவியை பெற எடியூரப்பா மறுத்துவிட்டார். தற்போது எடியூரப்பா ஷிகாரிபுரா சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பதைத் தவிர வேறு எந்த அதிகாரப்பூர்வ பதவியையும் வகிக்கவில்லை.அவருக்கு கேபினெட் அந்தஸ்து பதவி கிடைக்கும்போது அமைச்சர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News