சட்டசபையில் எதுக்குமே சப்போர்ட்டுக்கு வராத பா.ம.க... ராமதாசுக்கு போன்போட்டு புகார் சொன்ன எடப்ப


தமிழக சட்டசபையில் கூட்டணி கட்சிகளான பா.ம.க.வும் பா.ஜ.க.வும் தங்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்கிற ஆதங்கத்தில் இருக்கிறதாம் அதிமுக. இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸிடம் புகார் செய்திருக்கிறாராம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. 16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக தரப்பில் நீட் தேர்வு, டாஸ்மாக் விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆனாலும் திமுக அமைச்சர்கள் உடனுக்குடன் பதிலடி கொடுத்து அதிமுகவின் வாயை அடைத்தனர். இந்த சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்ததும் எடப்பாடி பழனிசாமியுடன் சீனியர் அதிமுக தலைவர்கள் சந்தித்து பேசினர். ஆதரவு தராத கூட்டணி கட்சிகள் அப்போது, சட்டசபையில் நாம் எழுப்பும் பிரச்சனைகளுக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவாக இருந்தால்தானே பலமாக இருக்கும்; தேர்தலில் ஜெயிக்க மட்டும்தான் கூட்டணி என்பதை போல பா.ம.க., பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் நடந்து கொள்கின்றனர். 
அதுவும் பா.ம.க. தரப்பில் இருந்து ஒரு ஆதரவு கூட கிடைக்கவில்லையே என குமுறி இருக்கின்றனர். டாக்டர் ராமதாஸிடம் புகார் பா.ஜ.க.வில் நாம் யாரிடமும் பேச முடியாது; அதனால் இதனை ராமதாஸின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி இருக்கின்றனர். இதனையடுத்து டாக்டர் ராமதாஸுக்கு போன் போட்டு பா.ம.க. எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தினாராம் எடப்பாடி பழனிசாமி. திமுக அரசுடன் இணக்கமா? மேலும் சட்டசபையில் திமுக அரசுடன் இணக்கமாக போகிற போக்கைத்தான் பா.ம.க. எம்.எல்.ஏக்கள் விரும்புகிறார்களோ என்கிற சந்தேகமும் எழுந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார் எடப்பாடி. இதனை கவனமாக கேட்டுக் கொண்ட டாக்டர் ராமதாஸ், இதுபற்றி நான் விசாரிக்கிறேன் என கூறியுள்ளார். பா.ம.க. நிலைப்பாடு இதனையடுத்து பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியை அழைத்து அதிமுகவின் அதிருப்தியை பற்றி விசாரித்திருக்கிறார் எடப்பாடி. முதல் கூட்டத் தொடர் என்பதால் சரியாக எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை.. இனிவரும் கூட்டங்களில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்தே செயல்படுவோம் என ஜி.கே.மணி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாம். கடுப்பில் பா.ம.க. இந்த உறுதிமொழி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தெரிவிக்கப்பட்டதாம். ஆனாலும் சில நாட்கள் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் நமது கட்சி எம்.எல்.ஏக்கள் பற்றி நம்மிடமே புகார் சொல்கிறதே அதிமுக என்கிற புகைச்சல் பா.ம.க.வில் எழுந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related News