கோவையில் ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்


திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வெறும் 3 நாட்களே ஆகியுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் திமுக தனது முதல் அதிரடியை தொடங்கி உள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் இதே போன்ற மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழ்நாடு கட்சிகள் தயாராகி வருகிறது. 
தமிழ்நாட்டில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் இன்னும் நடக்கவில்லை. செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் இதற்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 26ம் தேதி நடைபெற்றது. கூட்டம் இந்த கூட்டத்தில் நடந்த சில சம்பவங்கள்தான் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அதிரடியில் குதிக்க காரணம் என்கிறார்கள் . முதலில் இந்த கூட்டத்தில் திமுகவின் வெற்றிக்கு மாவட்ட செயலாளர்களை ஸ்டாலினும், பொதுச்செயலாளர் துரைமுருகனும் பாராட்டு தெரிவித்துள்ளனர். உங்களின் உழைப்பு அசாத்தியமானது, தேர்தல் நேரத்தில் நன்றாக பணியாற்றினீர்கள். 'கவலை வேண்டாம், நாங்கள் இருக்கிறோம்..' இந்தியாவுக்கு கூடுதல் நிதி.. நன்றி மறக்காமல் உதவும் அமெரிக்கா அதிக இடம் இன்னும் அதிக இடங்களில் வென்று இருக்கலாம். ஆனாலும் உங்கள் பணி தேர்தல் நேரத்திலும், கொரோனா தடுப்பிலும் சிறப்பாக இருந்தது என்று பாராட்டி உள்ளனர். அதன்பின் உள்ளாட்சி தேர்தலுக்கு என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், எப்படி தயாராக வேண்டும், தொகுதிகள் வாரியாக எப்படி பணி செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை செய்துள்ளனர். டார்கெட் 'செந்தில் பாலாஜி'.. எதிர்க்கட்சிகள் ஆயுதம்.. புஸ்ஸுனு போயிருச்சே.. எப்படி சமாளித்தார்! ஆலோசனை இந்த ஆலோசனையில் சில திமுக உறுப்பினர்கள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளும் பேசி சுமுகமாக தீர்க்கப்பட்டதாக தெரிகிறது. 
ஆனால் அதே சமயம் கொங்கு மாவட்டங்களில் திமுகவின் தோல்விக்கும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் ஜெயிக்க முடிந்த நம்மால் ஏன் கோவையில் வெல்ல முடியவில்லை, பொள்ளாச்சியில் கூட நாம் எப்படி தோல்வி அடைந்தோம் என்று ஸ்டாலின் கேள்வி கேட்டு இருக்கிறார். தடுப்பூசியை கண்டாலே கதவை சாத்திய கிராமத்தினர்.. செம பிளானுடன் மடக்கிய அதிகாரிகள் .. எங்க தெரியுமா? நடக்க கூடாது இதேபோல் உள்ளாட்சி தேர்தலில் நடக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் யாரிடமும் கோபமாக கடிந்து கொள்ளவில்லை.. உள்ளாட்சி தேர்தலுக்காக சில மாற்றங்களை செய்வேன் என்று மட்டும் அவர் குறிப்பிட்டதாக தெரிகிறது. இந்த உத்தரவை தொடர்ந்தே கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இவர் சரியாக பணிகளை செய்திருந்தாலும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். யார் மாறாக அந்த பொறுப்பில் கி.வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு நிர்வாகிகளுக்கு இடையே கடும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும், லோக்சபா தேர்தலின் போது நிலவிய ஒற்றுமை இப்போது நிலவவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் ஸ்டாலின் காதுக்கு சென்ற நிலையில்தான் உள்ளாட்சி தேர்தலில் இப்படி நடக்க கூடாது என்பதால் இந்த மாற்றம் நடந்துள்ளது. தொடக்கம் இனியும் மோதல் இருக்க கூடாது என்பதால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடக்கம்தான் என்று கூறுகிறார்கள். 
இந்த மாற்றம் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட சிறிய மெசேஜ்தான். கோவை மாவட்டத்தில் இன்னும் சில நிர்வாகிகள் மாற்றப்பட வாய்ப்புள்ளது. கொங்கு மாவட்டத்திற்கு திமுக சில சிறப்பு பொறுப்பாளர்களை நியமிக்க போகிறது. கோவை அதற்கு முன் சில நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கோவைக்கு திமுகவின் மூத்த உறுப்பினர் ஒருவர் விரைவில் பொறுப்பாளர் ஆகும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடக்கும்பட்சத்தில் கோவை திமுகவில் பெரிய மாற்றங்கள் ஏற்படும், கருத்துவேறுபாடுகள் சரியாகும் என்கிறார்கள்.

 

Related News