கரோனா சூழலில் நீட் தேர்வு நடத்தும் முடிவை பரிசீலனை செய்யேவண்டும் என பிரதமரிடம் ஸ்டாலின் வலிய

 

 

சென்னை: பிரதமர் மோடி வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் தொற்று பாதிப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார்.இந்நிலையில், இன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா, ஓடிசா, ஆந்திரா உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.காணொலி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பாக முதலமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், "கரோனா சூழலில் நீட் தேர்வு போன்ற தேசிய அளவிலான தேர்வு நடத்தும் முடிவை பரிசீலனை செய்யேவண்டும். பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் சூழ்நிலையில், தேர்வு நடத்துவது தொற்று பாதிப்புக்கு வழிவகுத்திவிடும்.இரண்டு கோடி குடும்பங்களுக்கு இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாயை கரோனா நிவாரணத் தொகையாக கொடுத்துள்ளோம். 
இதுபோன்று தகுதியுடையஅனைத்து அட்டைதாரர்களுக்கும் இத்திட்டத்தை ஒன்றிய அரசு விரிவுபடுத்தேவண்டும்.மூன்றாம் அலை வரும் எனக் கூறப்படும் நிலையில், அதனைச் சமாளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டுவருகிறோம். அதற்கு ஏதுவாக மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை ஒன்றிய அரசு செய்திடவேண்டும்.
தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை 6 விழக்காட்டில் இருந்து முழுமையாக தவிர்த்துள்ளதுடன் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளோம். பிறமாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு குறைந்த தடுப்பூசியே ஒதுக்கப்படுகிறது. சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க கோரியிருக்கிறேன். இதில், உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.கரோனா சூழலை கருத்தில் கொண்டு கரோன தொடர்பான அனைத்துப் பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவேண்டும்" என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Related News