பெட்ரோல், டீசலின் மீது மத்திய அரசு சுமத்தியுள்ள வரி, வழிப்பறியைப் போன்றது சசி தரூர் குற்றஞ்சா

 

 

சென்னை: காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரோனா பெருந்தொற்று காலகட்டம் சவாலானது. முகக்கவசம் அணிவது நமக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. அதேபோல், கடுமையாக அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையும் மக்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு 40 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள், எண்ணெய், பருப்பு வகைகளின் விலையும் அதிகரித்துள்ளது.நாட்டில் வேலைவாய்ப்பின்மை வரலாறு காணாத வகையில் உயர்வு கண்டுள்ளது. பலருக்கும் ஊதியம் குறைக்கப்படுகிறது. 
நாட்டில் 97 விழுக்காடு மக்கள் கடந்தாண்டைவிட ஏழையாக உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரிய நாடுகளில் இந்தியாவில்தான் கரோனா தொற்றுக்கு அரசு செலவினம் குறைவாக உள்ளது" என்றார்.பெட்ரோல் வரி என்னும் பெயரில் வழிப்பறி - சசி தரூர் குற்றச்சாட்டுகாங்கிரஸ்- பாஜக ஆட்சி ஒப்பீடுகடந்த ஜக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோதும் பெட்ரோல் விலை 65 ரூபாயாகவும், டீசல் விலை 44 ரூபாயாகவும் இருந்ததாகக் குறிப்பிட்ட சசி தரூர், "தற்போது, பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சுமார் 75 ரூபாயாக உள்ள நிலையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. டீசல் விலை 85 ரூபாய்க்கு மேல் உள்ளது.காங்கிரஸ் ஆட்சியில் எரிபொருள் மூலம் கிடைத்த வருவாய் மூன்று மடங்கு அதிகரித்து 4.2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அரசு எரிபொருள் வரி மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது.இதனால், கிடைக்கும் வருவாயில் 96 விழுக்காடு மத்திய அரசு எடுத்துக்கொண்டு மீதியைத்தான் மாநிலங்களுக்கு வழங்குகிறது. எரிபொருள் வரியை உபரி வரியாக மாற்றியுள்ளது. 
இதனால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது" என்றார்.வீட்டு உபயோகப் பொருள்கள் மீதான வரிமேலும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசை (டூத் பேஸ்ட்), பதப்படுத்தப்பட்ட உணவுகள், வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவற்றுக்கு 12 முதல் 18 விழுக்காடு வரி விதிக்கப்படுவதாகத் தெரிவித்த சசி தரூர், பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பதற்குப் பதிலாக ஏழைகளுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது என வேதனை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "பெட்ரோல், டீசல் மீதான வரியை உப வரியை மத்திய அரசு கணிசமான அளவில் குறைக்க வேண்டும். வரி வருவாயை மாநிலங்களுக்கு கூடுதலாகப் பகிர்ந்தளிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும். பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட வேண்டும்" என்றார்.

Related News