இனி சிங்கப்பாதைதான் - சசிகலா அடுத்த ஆக்சன் ஆரம்பம்


இனியும் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை என்று சசிகலா கூறியுள்ளார். என்ன ஆனாலும் சரி இந்த கட்சியை இனிமேலும் விட்டுவிட மாட்டேன். தலைவர், அம்மா காலத்து அ.தி.மு.க.வை மீண்டும் கொண்டு வருவேன் என்று அதிமுக தொண்டரிடம் பேசிய சசிகலா தெரிவித்துள்ளார். Sasikala Leaked Audio | முக்கிய தகவல்களை பரிமாறிய சசிகலா | Oneindia Tamil அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்த சசிகலா, குல தெய்வ கோவில் தொடங்கி தமிழகம் முழுவதும் பல முக்கிய கோவில்களில் யாகம் நடத்தி ஆன்மீக தரிசனம் செய்தார். பிரம்மஹத்தி தோஷம் நீங்க யாகம், எதிரிகளை வெல்லும் யாகம் என பல யாகங்கள் செய்த சசிகலா சில மாதங்கள் அமைதியாக இருந்தார். போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. 
 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக இல்லாவிட்டாலும் படுதோல்வி கிடைக்கவில்லை. வலிமையான எதிர்கட்சியாகவே சட்டசபையில் அதிமுக அமர்ந்துள்ளது. சட்டசபை எதிர்கட்சித்தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சி அதிகாரம் தமிழக அரசியல் நிகழ்வுகளை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சசிகலா தற்போது தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். மாநிலம் முழுவதும் தொண்டர்களுடன் பேசி அந்த ஆடியோவை ரிலீஸ் செய்து வருகிறார். ஏராளமான தொண்டர்களுடன் பேசிய ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. அதிரடி நீக்கம் சசிகலா உடன் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 20க்கும் மேற்பட்டோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி சசிகலா உடன் பல தொண்டர்கள் பேசி வருகின்றனர். மன வருத்தம் தருமபுரியை சேர்ந்த பாலு, புதுச்சேரியை சேர்ந்த லாவண்யா, கோவையை சேர்ந்த அமுல் சரவணன், எடப்பாடியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, வடிவேல் ஆகியோரிடம் சசிகலா பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. 
அதில் நான் பெங்களூருவுக்கு செல்லும்போதே ஒற்றுமையா இருக்க சொன்னேன். அதை அவங்க கேட்கல. அதனால ஆட்சியை இப்போ இழந்துட்டு நிக்கிறாங்க என்று கூறியுள்ள சசிகலா அதிமுகவை நல்லபடியா சரிபண்ணி நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துடலாம் என்றும் பேசியுள்ளார். எனது ஆசை இந்த கட்சியை வளர்க்க நான் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன். அதனால் என் கண் முன்னால நடப்பதை பார்த்து இனிமேல் அமைதியாக இருக்கமுடியாது. எனவே தொண்டர்களுடன் சேர்ந்து இந்த கட்சியையும், ஆட்சியையும் நல்லபடியா வழிநடத்தணும். அதுதான் எனது ஆசை. நிச்சயம் அதை செய்வேன். மிக விரைவில் எல்லாத்தையும் சரிபண்ணிடுவேன். கொங்கு மண்டலம் கொங்கு மண்டல மக்கள் எல்லாருமே தலைவர் மேலும், அம்மா மேலும் ரொம்ப பாசமா இருப்பாங்க... அந்த மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டு பழக்கப்பட்டவங்க... அந்த மக்கள் நம்ம மேல வச்ச பிரியம் எனக்கு பெரிசா பட்டுச்சு... அதனால்தான் கொங்குமண்டல மக்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை தரலாம்னு நினைச்சுதான் அந்த வாய்ப்பை கொடுத்துட்டு போனேன் என்று கூறியுள்ளார் சசிகலா. அப்புறம் ஆட்சி இப்போ இவங்க பண்றத பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு... என்ன ஆனாலும் சரி இந்த கட்சியை இனிமேலும் விட்டுவிட மாட்டேன். தலைவர், அம்மா காலத்து அ.தி.மு.க.வை மீண்டும் கொண்டுவருவேன் என்று கூறியுள்ள சசிகலா, முதலில் கட்சியை சரிபண்ணி நல்லபடியாக கொண்டுபோவோம். 
அடுத்து அம்மா ஆட்சியையும் அமைப்போம். கைவிட மாட்டேன் தொண்டர்களின் விருப்பத்தின்படி இனிமேல் செயல்படுவேன். இவங்க கட்சியை அழிக்க நான் விட்டுட மாட்டேன். கொரோனா முடியட்டும் தொண்டர்களை வந்து சந்திப்பேன். நீங்க எல்லாரும் என்கூட தான் இருக்கீங்க என்று கூறியுள்ள சசிகலா, என்னை நம்புங்க என்றும் யாரையும் நான் கைவிடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். தலைவர் ஆரம்பிச்சு, அம்மா வழிநடத்துன இந்த கட்சி இனியும் கீழே போக நான் விடவே மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அதிரடி ஆட்டம் சசிகலா பேசும் போதெல்லாம் கொரோனா காலம் முடியட்டும் நான் வருவேன் என்று கூறி வருகிறார். அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து கட்சியை கைப்பற்றுவாரா? அல்லது ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று தர்மயுத்தத்தை தொடங்குவாரா என பார்க்கலாம்.

 

Related News