கோவா, குஜராத், உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டம்!

 


 அடுத்த ஆண்டு நடைபெறும் கோவா, குஜராத், உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. சென்னையிலிருந்து 200 பஸ்கள்.. கிருமிநாசினியுடன் ஏற்பாடு செம! டெல்லி சட்டசபை தேர்தலில் 2-வது முறையாக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. டெல்லியை தொடர்ந்து பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் செல்வாக்கு இருக்கிறது என கருதுகிறது ஆம் ஆத்மி.

அகாலி தளத்துக்கு மாற்று பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சி பலவீனமடைந்துள்ள நிலையில் அந்த இடத்தை தங்களால் நிரப்ப முடியும் என்பது கெஜ்ரிவால் கணக்கு. இதனாலேயே பஞ்சாப் சட்டசபை தேர்தலில் படுமுனைப்பு காட்டி பணியாற்றி வருகிறார் கெஜ்ரிவால். இலவச மின்சார அறிவிப்பு பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரம், சீக்கியர் ஒருவரே முதல்வர் என்கிற கெஜ்ரிவாலின் முழக்கங்கள் எல்லாமே எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் முன்வைக்கப்படுகின்றன. 
இதே பாணியில்தான் உத்தரகாண்ட் தேர்தலையும் எதிர்கொள்ள இருக்கிறது ஆம் ஆத்மி. உத்தரகாண்ட் இலக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆக்டிவ்வாக இல்லை. அந்த எதிர்க்கட்சி வெற்றிடத்தை ஆம் ஆத்மி நிரப்பும் என்பது அக்கட்சியினரின் எண்ணம். அடுத்த ஆண்டு கோவா, உ.பி, இமாச்சல், குஜராத் மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். மொத்தம் 6 மாநிலங்களில் போட்டி ஆனால் ஆட்சி அமைப்பதற்கான இலக்கை நோக்கி பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் கவனம் செலுத்தி வருகிறது ஆம் ஆத்மி. இதற்கு அடுத்ததாக உ.பி, குஜராத், இமாச்சல், கோவா என வரிசைப்படுத்தி வைத்துள்ளது ஆம் ஆத்மி. அடுத்தடுத்த மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை வலிமைப்படுத்துவதன் மூலம் தேசிய கட்சியாக உருவெடுக்க முடியும் என்பது அக்கட்சியின் நீண்டகால திட்டம்.

Related News