எரிபொருள்கள் விலையேற்றம்: சைக்கிள், மண் அடுப்பு வைத்து மநீம ஆர்ப்பாட்டம்

 

 

தர்மபுரி: பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து சைக்கிள், மண் அடுப்பு வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தர்மபுரியில் முதல்முறையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் இன்று (ஜூலை 10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதல்முறையாக வீதியில் இறங்கிய மநீமமக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி, முதல்முறையாக அக்கட்சியினர் தர்மபுரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுநாள்வரை பொதுமக்களின் குறைகளையும், அரசு மீதான தங்களது எதிர்ப்புகளையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக வழங்கியே வந்தனர்.இதையடுத்து தற்போது முதல்முறையாக வீதியில் இறங்கி பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரியில் முதல் முறையாக மநீம கட்சியினர் ஆர்ப்பாட்டம்எரிபொருள்கள் விலையேற்றத்தைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முதல்முறையாக ஆர்ப்பாட்டம்ஒன்றிய-மாநில அரசுக்கு எதிராக கோஷம்கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சைக்கிள் ஒட்டியும், மண் அடுப்பு வைத்தும், எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும் நூதன முறையில் எதிர்ப்புத் தெரிவித்து, ஒன்றிய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related News