டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஐந்து தமிழ்நாடு தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊ

 

 

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கின் தடகளப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் 26 பேர் பங்கேற்கின்றனர். இதில் ஐந்து பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்நிலையில், தடகள வீரர்களுக்கான நாகநாதன் பாண்டி, ஆரோக்கிய ராஜிவ், சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி ஆகிய ஐவருக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையாக அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,"தமிழ்நாட்டிஸ் இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தைப் பெருக்கவும், தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கு கொள்ளவும் அரசு தேவையான பயிற்சிகளையும், ஊக்கத்தொகைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.தடகள வீரர்களுக்கு...முதலமைச்சர் அறிவிப்பு, ஸ்டாலின் ஊக்கத் தொகை அறிவிப்பு, 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை, ஒலிம்பிக் வீரர்களுக்கு 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய ஸ்டாலின்jfஅந்த வகையில், ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி; 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலப்பு பிரிவில் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி என மொத்தம் ஐந்து தடகள வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 5 லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கெனவே 6 வீரர்களுக்கும்...மேற்குறிப்பிட்ட வீரர்களில், எஸ்.ஆரோக்கிய ராஜிவ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், சுபா வெங்கடேசன் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகிய உயரிய திட்டங்களின்கீழ் பயிற்சி பெற்றவர்களாவர்.
ஏற்கனவே, கடந்த ஜூன் 26ஆம் தேதி அன்று ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 30 லட்சம் அரசின் ஊக்கத்தொகை முதலமைச்சர் வழங்கினார்.ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சி.ஏ.பவானி தேவிக்கு ரூபாய் 5 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.