கிழக்கு கடற்கரை சாலைகளில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்து வந்த நபரை கைது செய்த

கிழக்கு கடற்கரை சாலைகளில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்து வந்த நபரை கைது செய்து சுமார் 300 கிலோ போதை பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு: சென்னை, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை நடைபெற்று வந்தன.
போதைப் பொருள்கள் விற்பனை குறித்து அடையாறு துணை ஆணையர் விக்ரமனுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தனிப்படை காவலர்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்நிலையில், பழைய மகாபலிபுரம் சாலை, கண்ணகி நகர் சிக்னல் அருகே போதைப் பொருள்களை விற்பனை செய்ய வெள்ளை நிற மூட்டைகளுடன் இரண்டு சக்கர வாகனத்தில் நின்றிருந்த நபரை கையும் களவுமாக தனிப்படை காவலர்கள் இன்று (ஜூலை.14) கைது செய்தனர்.
தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அந்நபர் நாவலூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (40) என்பதும், வீட்டில் போதைப் பொருள்களை பதுக்கி வைத்து பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் அவர் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.தொடர்ந்து மாரியப்பன் மீது வழக்குப் பதிவு செய்த காவலர்கள், வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள் உள்பட சுமார் 300 கிலோ போதை பொருள்களை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Related News