தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவது

 

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதுமட்டுமன்றி, சிறிய தொழிற்சாலைகளும் பரவலாக காணப்படுகின்றன. இவற்றில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், உணவகங்கள், பேக்கரிகள் போன்றவற்றிலும் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று சிறிது அதிகரித்து வருகிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.வடமாநிலத் தொழிலாளர்கள்இதன் எதிரொலியாக ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். 
 அந்த வகையில் இன்று (ஆக.7) நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் குவிந்தனர்.குறிப்பாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்ற அச்சம் காரணமாக, தற்போது தங்களுடைய சொந்த ஊர்களுக்கு இவர்கள் திரும்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.