ஈகுவார் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் மீது எஸ்பியிடம் புகார் அளித்த ஒன்றிய குழுத்தலைவர்!

 

 


திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் தலைவராக பதவி வகித்துவருபவர் சிவகுமார். ஈகுவார் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் உஷா, அவரது கணவர் மீது இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிவகுமார் புகார் அளித்தார். அந்தப் புகார் மனுவில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நான் ஒன்றியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பிடிக்காமல், என்மீது என் குடும்பத்தார் மீதும் உஷாவும், அவரது கணவரும் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றும், பொது இடங்களில் சாதிப் பெயரைச் சொல்லி திட்டி அசிங்கப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தரா்.இந்த மனுவை காவல் கண்காணிப்பாளரிடம் அவர் வழங்க வரும்போது, பட்டியல் சமூகத்தில் பிறந்தது என் தவறா என கண்ணீர்விட்டு அவர் அழுதார்.அப்போது, புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related News