வீட்டில் பதிக்கி வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய புகையிலை பொருள்கள் பறிமுதல் - ஒருவர் க

 

 

 

காஞ்சிபுரம்: மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பரவலாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் புகையிலை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை கண்ணகிபுரம் அண்ணாமலை தெரு பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு விற்பனைக்காக வீட்டில் 32 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான குட்கா, பான்பராக், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.புகையிலை பொருட்கள் பறிமுதல்ஒருவர் கைது
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News