குட்டி ஏசி, பெட், போன்.. சிறையில்


சைதாப்பேட்டை கிளை சிறையில் "என்ஜாயி எஞ்சாமி" என்று என்று சகல வசதிகளுடன் இருந்த மாஜி அமைச்சர் மணிகண்டன் சொகுசாக இருந்ததாகவும், இதனால் இவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி இதை மறுத்துள்ளார். சென்னையை பெசன்ட் நகரில் வசித்து வரும் நடிகை சாந்தினி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்து இருந்தார். தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்து இருந்தார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சாந்தினி நேரடியாக புகார் அளித்திருந்த நிலையில், மணிகண்டனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. 3 முறை தன்னை கர்ப்பமாக்கி அதை கலைக்க வைத்ததாக சாந்தினி போலீசில் புகார் அளித்தார். Ads by Ads by கைது இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் இவர் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தனிப்படை அங்கு விரைந்து இவரை கைது செய்தனர். பின்னர் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட் விசாரணைக்கு பின் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர். விஸ்வரூபம்... கோவா, குஜராத், உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டம்! சிறை இந்த நிலையில் சைதாப்பேட்டை சிறையில் மணிகண்டன் சொகுசாக இருந்தது கூறப்பட்டது. இவரின் செல்லுக்குள் சின்ன பேட்டரி ஏசி, ஒரு ஆன்டிராய்டு போன், சார்ஜர், புது பிளேட், கப், மெத்தை என்று நிறைய வசதிகள் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. கைதி போலவே இவர் இல்லை, ஜாலியாக இருந்தார் என்றும் கூறப்பட்டது. விடிகாலையில்.. வானதியை பார்த்ததுமே.. கையில் டீ கிளாஸுடன் வரும் "அன்பு"கள்.. அடடே கோவை தெற்கு சொகுசு இதன் காரணமாகவே மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த செய்தி பொய்யானது என்று மறுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் வசதிகளுடன் இல்லை. அந்த செய்தி பொய்யானது.